Monday, April 20, 2009

நம் தெய்வத் தாய், ஸ்ரீ அம்மா


அம்மா என்ற வார்த்தையைக் கூறும் போதே இலட்சக் கணக்கான பக்தர்களின் நாவில் தேன் ஊறும். தேவாம்ருதம் அருந்திய உணர்வு ஏற்படும். இந்த அன்பு ததும்பும், கருணையைப் பொழியும் பார்வைக்கு முன், வார்த்தைகள் அர்த்தமற்றவை ஆகிவிடும். அம்மாவைத் தரிசித்த ஒவ்வொருவரின் உள்ளத்திலும், அவருடைய புன்முறுவலும், கருணாகடாட்சமும், பதிந்து விடும். அம்மாவின் கள்ளங்கபடமற்ற குழந்தை முகமும், பரந்த ஞானமும், அவரிடம் நம்மை ஈர்க்கும். அம்மாவைத் தரிசிக்கும் போது, நாம் வெளியே கூறமுடியாது ஒழித்து வைத்துள்ள துக்கத்தினையும் தான் உணர்ந்ததை, அம்மா நமக்கு உணர்த்துகிறார். இதனால் பக்தர்கள் கட்டுப் படுத்த முடியாமல் ஆனந்தத்தில் சிரிப்பர் அல்லது கண்களில் கண்ணீர் மல்க நன்றி தெரிவிப்பார். நேமத்திலுள்ள, ஸ்ரீ அம்மா பகவான் ஆலயத்தில் ஸ்ரீ அம்மாவின் தரிசனங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தத் தரிசனங்களின் போது , ஸ்ரீ அம்மா, பக்தர்களின் மீது அருள் மலையைப் பொழிந்து, அவர்களுடைய பிரார்த்தனைகளையும், விருப்பங்களையும், நிறைவேற்றுகிறார். பலருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை அருள்கின்றார். இத் தெய்வத் தரிசனத்தால், பல வருடங்களாக இருந்த தீய பழக்கங்களில் இருந்து விடுதலை, கண்பார்வையற்றவர்களுக்கு, பார்வை கிட்டுதல், முடவர்கள் நடக்கத் தொடங்குதல், குடும்பங்கள் ஒன்று சேருதல், போன்ற பல அற்புதங்கள் நடைபெறக் கண்டு அனைவரும் அமைதியாக ஆனந்தக் கண்ணீர் சிந்தி,ஆத்மா தூய்மை அடைவர். அம்மாவின் சந்நிதியில் அவரின் தரிசன பாக்யம் பெற்று பக்தர்கள் அடையும் அனுபவ அதிசயங்கள் பற்பல.

No comments:

Post a Comment