
பசுமையான, இயற்கைச் சூழலுக்கு நடுவே நிறுவப்பட்ட 'ஜீவாஷ்ரம்' என்னும் அந்தக் குருகுல பாடசாலை தான், எதிர் காலத்தில் உலகம் முழுதும் ஆட்கொள்ளவிருக்கும் தெய்வீக நிகழ்வின் பிறப்பிடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.பாதையின் இருபுறமும், மரப் பலகைகளில் பல வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. உறவுமுறைகள், குழந்தை வளர்ப்பு, சீரான பள்ளிக் காலம், துயரம், பந்தம், விடுதலை போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய மிக ஆழமான கருத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. குழந்தைகளின் சிரிப்பொலி அந்த வளாகத்தில் ரம்மியமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடசாலையின் தெய்வீகச் சூழ்நிலை குழந்தைகளின் மனதிற்கு இதமாகவும், சுதந்திரமான ஓர் உணர்வையும் ஏற்படுத்தின. ஒரு நாள், திடீரென குழந்தைகள், தங்களுக்கிடையில் பள்ளி வளாகத்துள் ஒரு தெய்வீக நிகழ்வின் பிறப்பைப் பற்றியும், வினோதமான நிகழ்ச்சிகள் நடந்து வருவதைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். தெய்வீக அருள் இறங்கி வந்ததன் விளைவாக, குழந்தைகள் நம்ப முடியாத அளவுக்கு ஞானிகளாகவும் அற்புத நோய் நிவாரணம் அளிப்பவர்களாகவும், இறைவனுடன் தொடர்பு கொள்பவர்களாகவும் திகழ்ந்தனர். பழங்காலத்தில், வெகு சில சன்யாசிகளும்,முனிவர்களும் அனுபவித்த உயர்நிலை சைத்தன்ய நிலையைப் பெற்றனர்.ஒரு நாள் ஒரு மாணவன், மதிய உணவு வேலைக்குப் பின்னர் வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில், ஓர் அறையில் ஸ்ரீ பகவன் அமர்ந்திருப்பதைக் கண்டான். இருவருடைய கண்களும் காண நேரம் சந்தித்தன. அச் சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்தான். அதற்குப் பிறகு 3 நாட்களுக்கு அச் சிறுவன் ராமகிருஷ்ண பரமஹம்சர். ராமலிங்கர் போன்ற மகான்கள் அடைந்த நிர்விகல்ப சமாதி நிலைக்குச் சென்றுவிட்டிருந்தான். அந்நிலையிலிருந்து மீள முடியாத போது ஸ்ரீ பகவானே அச் சிறுவனை சமாதி நிலையிலிருந்து மீட்டுக் கொண்டுவந்தார். குழந்தைகள் இது போன்று அசாதரண நிலைகளுக்குச் செலவது அடிக்கடி நிகழத் தொடங்கியது. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி ஞானம் ஏற்பட்டு அருள் வாக்கு கூறத் தொடங்குவார்கள். அல்லது ஜீவன் முக்தி நிலை பெற்ற சிறந்த ஞானிகளின் ஸ்திதிகலைப் பற்றி நிகரில்லா வாக்கு சாதூர்யத்துடன் பேசத் துவங்குவார்கள். அல்லது ஆழ்ந்த அமைதி, ஆனந்தம், அன்பை வெளிப்படுத்தி , அவர்களுடன் தொடர்பு கொள்வோரையும் அனநிளகளுக்கு அழைத்துச் செல்வார்கள். இம் மாபெரும் நிகழ்வுகளுக்குச் சிகரம் வைத்தாற்ப் போல், ஸ்ரீ கிருஷ்ணா ஜி என்னும் சிறுவனுக்கு, அவனுக்குள்ளிருந்த உயர் ஆன்மா, அல்லது 'அந்தர்யாமின்' விழித்தெழுந்தது. அதன் பிறகு அச்சிறுவன் மற்றவர் சிரத்தின் மேல் கை வைக்கும் போதெல்லாம் அவர்களுக்கும் கடவுள் அந்தர்யாமினாக எழும் அதிசயம் நிகழ்ந்தது. இந்தப்புனித நிகழ்வே பின்பு தீட்சையாக வழங்கப்பட்டு, உலகெங்கிலும், இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இதயத்திலுள்ள தெய்வத்துடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்தக் கால கட்டத்தில் தான், ஸ்ரீ அம்மாவும் , பகவானும் தங்களுடைய நோக்கத்தை உலகிற்குத் தெரிவித்தனர். நாடெங்கிலும் சீடர்கள் மூலம் இந்த இயக்கம் பரவத் துவங்கியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறியவர்,பெரியவர் எனப் பேதமின்றி எல்லையற்ற அன்பு நிலையையும் அளவற்ற ஆனந்தத்தையும், ஸ்ரீ அம்மா பகவானின் அருளால் கண்டு பிடித்து,தங்களுடைய உடல் மற்றும் மன உபாதைகளில் இருந்து மீண்டு வெளிவந்தனர்.இவ்வாறு துவங்கியது........
No comments:
Post a Comment